திங்கள், 22 நவம்பர், 2010

குண்டலினி




குண்டலினி சக்தி என்றால் என்ன?
நமது உடலின் கீழ்முதுகுப்பகுதியில் மலத்துவாரத்துக்கு சற்றுமேலே அதன் அழுத்தத்தோடு கிடப்பதுதான் உருண்ட குண்டலினி.மனிதனாகப் பிறந்த அத்தனைபேருக்கும் இந்த குண்டலினிசக்திஇருக்கிறது.இங்குதான் ஞானத்தின் தலைவனாகிய விநாயகக் கடவுள் இருக்கிறார்.நமது உயிரின் மையப்புள்ளியும் இதேதான்.ஒருவரின் உயரம் எவ்வளவோ,அதில் எட்டுச்சாண் உயரத்துக்கு இந்த குண்டலினியின் உயரம் இருக்கும்.
இதனை குறிப்பிட்ட தியானம் மூலமாக எழுப்பி,நமது முதுகுத் தண்டுவடம் வழியாக உருட்டிச்சென்று,பின் கழுத்து வழியாக அப்படியே மேலேற்றிச் சென்று அதை நமது உச்சந்தலையில் நிறுத்தினால்,கிடைக்கும் உணர்வு என்ன தெரியுமா?
ஒரு பெண்ணை உடலுறவுகொண்டு,அவளை உச்சகட்ட இன்பத்துக்குக் கொண்டு சென்று,அப்போது நாமும் உச்சகட்ட இன்பத்துக்கு வந்து நமது விந்து வெளியேறும்போது என்ன பரவசம் ஏற்படுமோ,அதை விட பல மடங்கு பரவசம் நமது உடல் மற்றும் மனதில் ஏற்படும்.ஒரு முறை அந்தசுகத்தைஅனுபவித்தவர்கள்,திரும்பத்திரும்பஅனுபவிக்கத்துடிப்பார்கள்.அப்படி குண்டலினி சுகத்தை அனுபவித்தவர்களுக்கு இந்த உலகத்து இன்பங்கள் அனைத்தும் தூசியாகத் தெரியும்.
இந்த குண்டலினி சக்தியை எழுப்ப பல ஆண்டுகள் ஆகும்.பலருக்கு பல பிறவிகள் நமது தலைக்கு மேலே ஒரு முழம் உயரத்தில் நமது குண்டலினி சக்தி நிற்கும்.இந்த நிலையை அடைய சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம். நமது உச்சந்தலையிலிருந்து ஒரு முழம் உயரத்தில் நமது குண்டலினி சக்தி நின்ற உடனே நமது பிறந்த ஜாதகப்படி,நாம் இந்தப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள்,விபத்துக்கள்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,போராட்டங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு.....பிட்யூட்டரி....


பெரிய அறிவாளிகளை மண்டைச்சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்று அடிக்கடி கூறக்கேட்டு இருப்போம. அது என்ன மண்டைச் சுரப்பு என்று சிந்தித்துப்பார்த்தால் நம் முன்னோர்கள் எந்தச் சொல்லையும் பொருளற்று பயன்படுத்தவில்லை என்பது புலனாகும். பொதுவாக மனித உடலில் எண்ண்ற்ற சுரப்பிகள் (Glands) காணலாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர் ஒரு குழாய வழி எடுத்துச்செல்லப்பட்டு இரத்ததில் கலக்கப் படுகிறது.. இதே போல மனித உடலில் வேறு பல சுரப்பிகளும் உள்ளன. இவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள் சாதாரண சுரப்பிகள் போலன்றி நேரடியாக இரத்தத்தில் கலக்கும் தன்மையை உடையன. இதனை நாளமில்ல சுரப்பிகள் (Endocrine Gland) என்பர். இந்த நாளமில்லா சுரப்பிகளில் சில சுரப்பிகள் ஒரு ஹார்மோனையும் சில சுரப்பிகள் இரு ஹார்மோன்களையும் இன்னும் சில மூன்று நான்கு ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைமை சுரப்பியாகத் திகழ்வது பிட்யூட்டரி சுரப்பி. (Pituitary Gland). இது இளஞ்சிவப்பும் சாமபல் நிறமும் கலந்த ஒரு நீல நிறத்தில் காணப்படும். மற்ற நாளமில்ல சுரப்பிகளையெல்லாம் இது ஆள்கிறது. அவைகளை இயக்குகிறது. மற்ற சுரப்பிகளின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இதுவே தசைகள் எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. இது கரியமில வாயு, புரதச்சத்து, கொழுப்புச்சத்துக் குறைபாட்டினைக் கட்டுப்படுத்துகிறது. இது இடம்பெற்றுள்ள இடம் எண்சான் உடலுக்குப் பிரதானமாகத் திகழும் தலையில். இதனை,

”உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலையடி அவி

யாமலெரியுது வாலைப் பெண்ணே”

என்று கொங்கணசித்தர் எத்துனை அழகாகப் பாடுகிறார். தலை உச்சிக்கு நேராக உள் நாக்கிற்கு மேலாக ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. அச்சு என்றால் பீடம் என்று பொருள். இச்சொல் தலைமை பீடத்தை வகிக்கும் சுரப்பி பிட்யூட்டரி என்பதை விளக்கும். அது அவியாமல் எரியும் விளக்கு என்றும் கூறுவார்.

இந்த பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாட்டினால் வருவது டிராஃபிஸம் (Dwarfism) என்றழைக்கப்படும் மிகக் குள்ளமான உருவம். இது குறைவாகச் சுரக்கும் போது இக்குள்ள நோய் ஏற்படுகிறது.

இதன் மிகுதிப்பாட்டில் வருவதே ஜெய்ஜாண்டிஸம் (Gigantism) எனறழைக்கப்படும் அதிக வளர்ச்சி.. இது அதிகமாகச் சுரக்கும் போது அளவுக்கு அதிகமான உடல் உயரம், வளர்ச்சி ஏற்படுகிறது.

குமரப்பருவத்தில் இளைஞர்கள் கிடு கிடுவென அகோரமாக வளர்ச்சி அடைந்து காணாப்படுவர். இதன் குறைபாட்டாலோ மிகுதிப்பாட்டாலோ வரும் மிக முக்கியமான ஒரு விளைவே இந்த அகோர வளர்ச்சியான அக்ரோமகலி (Acromegaly) எனப்படும் குமரப்பருவ குறைபாடு..

அதுமட்டுமல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் திறன், நினைவாற்றல், தன்னம்பிக்கை இவற்றையும் இச்சுரப்பியே காக்கிறது. இச்சுரப்பி நன்கு வேலை செய்வதால் மூளையின் திறனும் அதிகரிக்கிறது.

இந்த சுரப்பியின் சிறப்பான வேலைத்திறத்தினால் உருவாவவர்களே அறிவிற்சிறந்த மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், ஞானிகாளும், கவிஞர்களும் என்போர்.

இது எப்போது பாதிக்கப்படுகிறது? மற்ற உறுப்புகளைப் போன்றே அதிர்ச்சி, விபத்து, பிரசவம் ஆகியவற்றினால் பாதிக்கப் படுகிறது. இவ்வாறு இந்த பிட்யூட்டர் பாதிக்கப் படும்போது இதன் அருகில் மூளையில் அமைந்துள்ள மற்றொரு சுரப்பியான பினியல் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. எவ்வாறு பிட்யூட்டரியின் சிறப்பான் வேலையின் போது அறிஞர்களும் சான்றோர்களும் அவதரிக்கின்றார்களோ அதே போல இச்சுரப்பிகளின் குறைபாட்டின் காரணமாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்து விடுகிறது..

இந்த பிட்யூட்டரியைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது சற்றேறக்குறைய அதன் அருகில் உள்ள பினியல் சுரப்பியையும் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இச்சுரப்பியின் செயல்பாடுகள் பல இன்னும் மருத்துவ ஆய்வுக்கே புலனாகாதப் புதிர்களாக உள்ளன. இதுவும் மற்ற சுரப்பிகளை கட்டுப் படுத்துகிறது.

இந்தச் சுரப்பியால் விளையும் நன்மை. யாதெனில், இச்சுரப்பி சோடியம், பொட்டாசியம், ஆகிய உப்புகளின் அளவைச் சீராக வைக்கிறது. இச்சுரப்பியும் நன்கு வேலை செய்யும் போது அறிவு, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் அதிகரிக்குமாம். மனம் எதற்கும் கலங்காது இருக்குமாம். இதன் காரணமாகவே நாடு யோகிகளையும் ஞானிகளையும் பெற்றுள்ளது.இது சரிவர இயங்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இச்சுரப்பி இயக்கக் குறைவால் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாகி கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. உள்ளங்கால் உள்ளங்கை பகுதிகளில் அதிக வியர்வை உண்டாகிறது.இதைத்தவிர தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கனையம், சினைப்பைகள், விதைப்பைக்ள் என்று முக்கியமான எட்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றுள் சினைப்பையும் விதைப்பையும் சுரப்பிக்ள் என்று அழைக்கப்படாவிட்டாலும் இவை பிட்யூட்டரியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்சுரப்பிகளைப் போன்றவையே.

மூச்சுக்குழாயின் இரு பக்கங்களில் இருக்கும் தைராய்டு சுரப்பு தைராக்சின் என்ற திரவத்தைச் (ஹார்மோன்)சுரக்கிறது. இது அதிகமாகச் சுரக்கும் போது எண்ணம், சொல், செயல் எல்லாம் மந்தமாக இருக்கும். அதிகமாக சுரக்கும் போது (ஹைபர் தைராய்டு) எல்லாமே முந்தைய செயல்களுக்கு எதிர் மாறாக இருக்கும். இது அதிகமாக வேலை செய்யாத போது இதில் உள்ள அயோடின் குறைபாட்டால் காய்டர் (Goitre) எனப்படும் முன் கழுத்துக் கழலை தோன்றுகிறது.

பாரா தைராக்சின் எனப்படுவது, தைராய்டு சுரப்பிகளின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டாக மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. இது கால்சியம், இரத்தம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றது.

மார்புப் பகுதியில் மூச்சுக்குழாய இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ளது தைமஸ் சுரப்பி. இது குழ்ந்தைகளின் நோய் தடுப்புச் சக்திக்கு பெரிதும் உதவுகிறது.

சிறு நீரகங்களின் தலைப் ப்குதியில் பக்கத்திற்கு ஒன்றாக உள்ள இரு சுரப்பிகள் அட்ரினல் சுரப்பி எனப்படும். கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் இதன் சுரப்பு விகிதம் கூட கூறைய நிகழ்கிறது. இது கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது.

இன்சுலின் என்னும் திரவததைச் சுரக்கும் கணையம் குறைந்தால் ஹைபர்க்ளைசீமியா (Hyper glycamia) என்ற நீரிழிவு நோயும், இதன் சுரப்பு அதிகரித்தால் இரத்த அழுத்தமும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலியும் ஏற்படுகிறது.

பெண்களின் கருப்பையின் இருபுறமும் இரண்டு சினைப்பைகள் உள்ளன. இது முக்கியமாக தலைமை சுரப்பியான பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

விந்துககளை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் மகப்பேற்றுக்குக் காரணமாவதுடன் செல்கள், எழும்பு மஜ்ஜை., நரம்புகள், விந்தணுக்கள் ஆகியவற்றை சீர் செய்கின்றன. இவை இரண்டும் சுரப்பிகளுடன் சேக்கப்படாவிட்டாலும் இவையும் பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

”நெற்றியிலே தயங்குகின்ற நீலமாம் விளக்கினை

உற்றுணர்ந்து பாராடா உன்னுள் இருந்த சோதியைப்

பத்தியிலே தொடர்ந்தவர் பரமயம் அதானவர்

அத்தலத்து இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே”

என்று சிவ வாக்கியார் உரைப்பது எதனை என்று நினைக்கின்றீர்கள்? நெற்றியிலே இருக்கின்ற நீல விளக்கு இந்த பிட்யூட்டரி என்னும் சுரப்பிதான். ஒளிர்விடுகின்ற (தயங்குகின்ற) அதனை உற்று பார்த்து நினைவுகளை ஒரு தலையாக அடக்கி உணர்ந்து பார்த்து, உள்ளே நிறைந்து இருக்கின்ற சோதிமயமான இறைவனைத் தியானம் செய்பவர் எங்கும் பரவி இருக்கின்ற தேவ நிலையை அடையலாம். தியானம் என்கிற மூச்சுப் பயிற்சியின் மூலம் இந்த பிட்யூட்டரி சுரப்பியை நன்கு செயலாற்ற வைக்கலாம். இதன் செயல்பாடு உடலுக்கு மட்டுமன்றி அறிவு வளம் பெற்ற சான்றோராக ஞானியாக ஆக்கும் என்று மேலே கண்டோம்

மாறல்: இத்துனை செயல்பாடுகளை நிகழ்த்தும் சுரப்பிகளின் தலைமை தலையில் தான் உள்ளது. அந்த நீலமாம் விளக்குதான் பிட்யூட்டரி என்பது நாம் அறிந்தது. இந்த தலைமையைச் சீராகச் சுரக்கச் செய்ய தியானத்தால் முடியும். அதாவது குண்டலினி யோகம் அல்லது சரப்பயிற்சி என்பர் அக்காலத்தில். இரு புருவ மத்தியில் பார்வையையும் மனதையும் ஒருநிலையில் வைப்பதால் இம்முறையைச் செய்யலாம். முறையான தியானம் நாளமில்லா சுரப்பிகளின் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரியை சரிவர வேலை செய்ய வைக்கும் என்பதே. தலைமை சரிவர இயங்கினால் மற்றவையும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்து நம்மை உடல் அளவிலும் உள்ளத்து அளவிலும் செம்மையாக வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.