வெள்ளி, 3 டிசம்பர், 2010

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.
நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.
உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர்கள் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?
கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததை பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருபத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்து கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிக் களம்! எல்லாத் தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பில் கவனம் செலுத்தலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இது என்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?-----------------

திங்கள், 22 நவம்பர், 2010

இந்து மதம்


இந்து மத பிரமாணங்கள்

இந்து மத பிரமாணங்கள்:


நாம் வசிக்கும் பூமிக்கு ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று பெயர். இது கர்மபூமி எனப்படுகிறது. இங்கு புண்ணிய நூல்கள் பல உண்டு. இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. புண்ணிய நதிகளும், புகழ்பெற்ற தலங்களும் ஏராளம். இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மதம் என்கிற வாழும் வழிமுறை ஒன்று தோன்றியது. கலைகளிலும், நாகரிகத்திலும் அம்முறையைப் பின்பற்றியவர்கள் ஒப்பற்ற புகழ் பெற்றிருந்தனர். அவர்கள் பேசிய மொழியிலிருந்து மற்ற நாட்டவர் நாகரிகத்தைக் கற்றுக் கொண்டதாகவும் சொல்வதுண்டு. அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையே, இந்து மதம் அல்லது சனாதன தர்மம் எனப்படுகின்றது.

இதற்கு ஆதாரமான கிரந்தங்கள் சம்ஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன. அவை பலவாக வேறுபட்டிருப்பினும், ஒரே கடவுளைப் பற்றியே கூறுவன. அந்தக் கிரந்தங்கள், வேதங்களின் கருத்தையே வெளிப்படுத்துகின்றன. உயிரிகளுக்கு உறுப்புகள் எப்படி இன்றியமையாதவையோ, அப்படியே வேதத்துக்கு வேதாங்கங்கள் முக்கியமானவை.

வேதம், சில காரணங்களால் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வேதாங்கங்கள் 6; உபாங்கங்கள் 4... ஆக, 14 வித்யைகள் என்றும், உபவேதங்கள் 4 சேர்ந்தால் 18 வித்யைகள் என்றும் கூறுவார்கள். இவை அனைத்தும் வேதத்தைத் தழுவியவை ஆதலால் இவற்றிலிருந்து உண்டான மதங்களை வைதிக மதம், ஆஸ்திக மதம் என்றனர். வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாத மதங்களை அவைதிகம் நாஸ்திகம் என்றார்கள்.


வேதம்:
வேதம், அறிவைத் தரும் நூல். அதையே ச்ருதி என்பர். காதால் கேட்டுக்கேட்டு, உபதேசங்களின் மூலமாகப் பரவியதால், அப்பெயர் ஏற்பட்டது. வேதத்தைப் பின்பற்றி சில கிரந்தங்களை இயற்றிய பெரியோர்களும், வேத விளக்கங்களை (பாஷ்யம்) எழுதியவர்களும் வேதம் நித்யமானது; அனந்தமானது; மனிதனால் எழுதப்படாதது; ஈசன் முகத்திலிருந்து வெளிவந்தது; அதை மகரிஷிகள் தங்கள் தவ பலத்தால் அறிந்து உலக நன்மைக்காக வெளியிட்டார்கள் என்றே கூறியுள்ளனர்.

வேதவியாசர், ருக், யஜுர், ஸாம, அதர்வண என்று வேதத்தை நான்காகப் பிரித்தார். வேதத்திலுள்ள பெரும் பகுதி, யாகத்தைக் குறித்தே சொல்கின்றன. யாகத்தைச் செய்து முடிக்க ரித்விக்குகள் (கர்மாவைச் செய்பவர்கள்) வேண்டும். யாகம் செய்யும் எஜமானன், பிரும்மா, அத்வர்யு, ஹோதா, உத்காதா ஆகிய இவர்கள் முக்கியமானவர்கள். அந்தந்த தேவதைக்கு உரிய மந்திரங்களைக் கூறி, அவரவர் குணத்தை வெளியிடும் ஹோதாவுக்கு வேண்டியவற்றைக் கொண்ட ருக்வேதத்தை ஹோத்ருப்ரயோகம் என்பர்.

எல்லாத் தொழில்களையும், எஜமானனுக்காகச் செய்யும் அத்வர்யுவுக்கு வேண்டியவை, யஜுர் வேதத்தில் உள்ளன. பாடல்கள் தோத்திரங்கள் இசைத்து, தேவதைகளை மகிழச் செய்யும் உத்காதா என்பவருக்குரியது சாமவேதத்தில் காணப்படுகிறது. யாகத்துக்கு உபயோகப்படாமல், பொருள் வளர்ச்சி ஏற்படவும், ஆசைகள் உடனே நிறைவேறவும், எதிரியை வீழ்த்தவுமான உபயோகங்கள் அடங்கியது அதர்வண வேதம். இந்த நான்கு வேதங்களும், உலகத்துக்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு வித புருஷார்த்தத்தை அளிப்பன. வேதம் தர்ம காண்டம், பிரும்ம காண்டம் என இரு வகைப்படும்.

தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்று பலத்தை அளிக்கத் தக்கது தர்ம காண்டம். மோட்சத்துக்கேற்ற வழியைக் கூறுவது பிரும்ம காண்டம். கர்ம காண்டம், மந்திரம், ப்ராஹ்மணம் என இரு வகைப்படும்.

அனுஷ்டானத்துக்குரிய திரவியம், தேவதை முதலியவற்றை விளக்குவது மந்திரம். அது, பாதங்களோடு கூடி, காயத்ரி முதலிய சந்தஸ்களுடன் சேர்ந்திருந்தால், ருக் மந்திரம் எனவும், பாடலோடு சேர்ந்திருந்தால் சாம மந்திரம் எனவும், இந்த இரண்டோடும் சேரா விட்டால் யஜுர் மந்திரம் எனவும் சொல்லப்படும்.

விதி, அர்த்தவாதம் என, ப்ராஹ்மணம் இரு வகைப்படும். விதி பல வகையானாலும், ஒரு கர்மாவை விதிப்பதே அதன் கருத்து. விதித்த கர்மாவைப் பற்றித் துதிப்பதும், வேண்டாதவற்றை நிந்திப்பதும் அர்த்தவாதம். கர்ம காண்டத்தைப் பற்றி சூத்திரமாகவும் விளக்கமாகவும், மகான்களால் எழுதப்பட்ட சாஸ்திரங்கள் பூர்வ மீமாம்ஸை எனப்பட்டன.

பிரும்ம காண்ட உபநிஷத்தைப் பின்பற்றி, வேதவியாசரால் சூத்திரமாக வெளியிடப்பட்டு, சங்கரர் முதலான ஆசார்யர்களால் விளக்கம் எழுதப்பட்ட கிரந்தங்களுக்கு உத்திர மீமாம்ஸை அல்லது வேதாந்தம்! என்று பெயர்.

இந்த வேத அங்கங்கள் ஆறு வகைப்படும்.

சீக்ஷா:
வேதத்தை தவறாக உச்சரித்தால் பலனைத் தராததோடு, அப்படி சொல்பவரைக் கெடுக்கும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு வேதத்தை ஓதச் சொன்னார்கள். உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் என ஸ்வரம் மூன்று வகைப்படும். அச்சு, ஹல் என்று அட்சரங்கள் இரு வகைப்படும். அச்சு - ஹ்ரஸ்வம், தீர்த்தம், ப்லுதம் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றைப் பற்றிக் கூறுவது சீக்ஷா என்ற வேதாங்கம்.

இவை, பாணினி முனிவரால் எல்லா வேதங்களுக்கும் பொதுவாக ஐந்து காண்டங்களாகவும், இன்னும் பலரால் ஒவ்வொரு வேதத்துக்கும் தனித்தனியாகவும் வெளியிடப் பட்டிருக்கின்றன.

வியாகரணம்:
இதை, இலக்கணம் என்பர். ஒவ்வொரு பதத்தையும் பிழை இன்றி உச்சரிக்க வேண்டும். சீக்ஷா என்பதால் எழுத்து சுத்தமாகத் தெரிந்தாலும், பதத்தை அறிய மற்றொரு நூல் அவசியம். நடராஜப் பெருமான் நடனம் செய்தபோது, அவரது உடுக்கையிலிருந்து கிளம்பிய 14 சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, பாணினி அவற்றை எட்டு அத்தியாயங்களாக எழுதினார். காத்யாயனர், அதற்கு ஒரு அமைப்பினை வகுத்தார். அதற்கு பதஞ்சலி மகரிஷி விளக்கவுரை எழுதினார். இன்னும் பலரால் பல வியாகரணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

நிருக்தம்:
பொருளை உணராமல் சொல்லப்படும் வேத உச்சாடனத்துக்கு முழுமையான பலன் கிடைக்காது என்பதால், யாஸ்க முனிவர் பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட நிருக்தத்தை எழுதினார். நாம, ஆக்யாத, நிபாத, உபஸர்க்க என நான்கு வகை பதங்களை விவரித்து, அந்தப் பதங்களுக்கான பொருளும் அதில் கூறப்பட்டிருக்கிறது. வைதிக வார்த்தையின் பொருளை விளக்க, ஐந்து அத்தியாயங்கள் கொண்ட ஒரு நிகண்டுவும் அவராலேயே இயற்றப்பட்டது.

சந்தஸ்:
ஒவ்வொரு மந்திரத்தையும், அதற்குரிய ரிஷி, சந்தஸ், தேவதை இவற்றை அறிந்து உச்சரிக்க வேண்டும். எனவே, சந்தஸ்ஸை விளக்க ரிஷி பிங்களரால் எட்டு அத்தியாயங்களுடன் சந்தஸ் சாஸ்திரம் எழுதப்பட்டது. அதில் மூன்று அத்தியாயங்களில் காயத்ரி முதலிய வேத சந்தஸ்ஸுகளும், ஐந்து அத்தியாயங்களில் புராண இதிகாசங்களுக்குரிய லௌகிக சந்தஸ்ஸுகளும் விளக்கப் பட்டுள்ளன.

ஜோதிடம்:
வேதோக்த கர்மாக்களை அனுஷ்டிக்க, நாள் நட்சத்திரம் லக்னம் முதலியவற்றை விளக்கி, ஆதித்யர், கர்கர் முதலியவர்களால் ஜோதிடம் என்ற வேதாங்கம் எழுதப்பட்டது.

கல்பம்:
வேதம் எல்லையற்றது. எனவே, அதில் மறைந்துள்ள சாகைகளிலிருந்து எந்தக் கர்மாவை, எந்தக் காலத்தில், எதற்குப் பிறகு, எப்படிச் செய்வது என்பதை விளக்குவது கல்பம்.

உப அங்கங்கள்:
முன்னர் கண்ட ஆறு அங்கங்களுக்கும் சாதகமான அங்கங்களே உபாங்கங்கள். அவை புராணம், நியாயம், மீமாம்ஸை, தர்ம சாஸ்திரம் என நான்கு வகைப்படும்.

புராணம்:
உலகப் படைப்பு, அரச வம்சம், பெரிய அரசர்களின் சரிதம், மந்வந்தரம் முதலியவற்றை விளக்குபவை புராணங்கள். பிராம்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், ப்ரும்ம வைவர்த்தம், லைங்கம், வாராஹம், ஸ்காந்தம், வாமனம், கௌர்மம், மாத்ஸயம், காருடம், பிரும்மாண்டம் என்ற பதினெட்டு புராணங்களை வேதவியாசர் இயற்றினார். நரசிம்மம், நாந்தம், சிவதர்மம், நாரதீயம், காபிலம், பிரும்மாண்டம், லிங்கம், ஸாம்பம், மாரீசம் முதலியன சில புராணங்களும் பல்வேறு மகரிஷிகளால் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு உப புராணம் என்று பெயர்.

நியாயம்:
இது, ஐந்து அத்தியாயங்களாக மகரிஷி கௌதமரால் இயற்றப்பட்டது. பிரமாணம் முதலிய பதினாறு பத அர்த்தங்களின் தத்துவத்தை அறிவதே இதன் பலன். கணாதர் என்பவரால் பத்து அத்தியாயங்கள் கொண்ட தத்துவமான வைசேஷிகம் தோற்றுவிக்கப்பட்டது. அதில் திரவ்யம் முதலிய ஆறு பத அர்த்தங்களின் தத்துவம் கூறப்பட்டுள்ளது. இதுவும் நியாய சாஸ்திரத்திலேயே சேரும். இவ்விரண்டையும் தர்க்க சாஸ்திரம் என்பர்.

கௌதமர், கணாதர் இருவரின் தத்துவங்களைத் தழுவியும் தழுவாமலும் மகான்கள் பலரால் கிரந்தங்கள் பல வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பொருளின் உண்மையையும் விவரிக்க, நியாய சாஸ்திரம் இன்றியமையாதது. பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் முதலிய பிரமாணங்களுக்கு விரிவாக இதில் லட்சணம் கூறப்பட்டிருக்கிறது.

மீமாம்ஸை:
மீமாம்ஸை என்றால், கௌரவமாக விசாரிப்பது என்று பொருள். இது, கர்ம மீமாம்ஸை, சாரீரக மீமாம்ஸை என இரு வகைப்படும். கர்ம மீமாம்ஸை என்பது, ஜைமினி மகரிஷியால் பன்னிரண்டு அத்தியாயங்களாக எழுதப்பட்டது. இதில் தர்ம லட்சணம், எந்த மந்திரத்தை எங்கே படிப்பது முதலிய கர்மாவைப் பற்றிய தத்துவங்களும், கர்மங்களின் பலமும் கூறப்பட்டுள்ளது. வியாசரால் உபநிஷத அர்த்தங்களைக் கொண்ட பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களாக இயற்றப்பட்டது. பக்தி, கர்மம் முதலியவற்றால் பெறும் சுகம் நிலையானது இல்லை. புண்ணியம் உள்ள வரையில்தான் இந்திரலோகம் முதலிய சுகம் கிட்டும். புண்ணியம் குறைந்தவுடன் முன் போலவே பூலோகத்தில் பிறக்க வேண்டும். அதற்கு சாதனமானது வேதாந்த சாஸ்திரம் ஒன்றே. வேதத்தின் முடிவான உபநிஷத்துகளை வேதாந்தம் என்று சொல்வதுண்டு. இவை, பரப்பிரும்மத்தை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கூறுவன. இதுவே சாரீரக மீமாம்ஸை.


தர்ம சாஸ்திரங்கள்:
தர்மம் என்ற சொல்லுக்கு (தன்னை அனுசரிப்பவனை நரகத்தில் விழவிடாமல்) நிறுத்தம் என்று பொருள். அவரவர் கடமையைச் செய்யும்படி சொல்வதால் இந்த நூலுக்கு தர்மசாஸ்திரம் என்று பெயர். இதை ஸ்மிருதி என்றும் சொல்வர்.

ராமாயணம்:
ஆதிகவி வால்மீகி இயற்றிய ராமாயணத்தை, நடந்த கதை ஆதலால் இதிகாசம் என்றாலும், ஸ்மிருதிகளுடனேயே சேர்ப்பர். தாய் தந்தையருடன் ஒரு மகன் நடந்து கொள்ள வேண்டிய முறை, பொய் சொல்லாமை, குருபக்தி, சகோதர பாசம், நீதி, மக்களை பாதுகாத்து ஆட்சி செய்வது, தினசரி கர்மாக்களைச் செய்தல், தர்ம யுத்தம், தீர்த்த கௌரவம், விருந்தினரை கௌரவித்தல், தானம், பணிவு, ஆண்&பெண் தர்மம், சத்திரிய தர்மம், பணிவிடை, கற்பு, தர்ம பலம் முதலிய பல தர்மங்களை விரிவாகவும் கதை வடிவிலும் எடுத்துக் காட்டியிருப்பதாலும், வேதமும் தர்மசாஸ்திரமும் எனது ஆக்ஞை என்று வாசுதேவனே நேரில் தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டியதாலும் ராமாயணத்தை வால்மீகி ஸ்மிருதி என்றனர்.

மகாபாரதம்:
வேதவியாசரால் சொல்லப்பட்ட பாரதத்தில் பல இடங்களில் கதை மூலமாகவும், நேராகவும், கேள்விக்கு பதிலாகவும் விரிவாக தர்ம விளக்கம் தரப் பட்டிருக்கின்றன. பாரத: பஞ்சமோ வேத: என்று ஒரு பழமொழி உண்டு. வேதம் என்றே சொல்லத்தக்க இந்நூலை தர்மசாஸ்திரத்தில் சேர்ப்பது பதினெட்டு புராணங்களையும் வெளியிட்ட வியாசர், மகாபாரதத்தின் இடையே பகவத்கீதை என்ற கிரந்த ரத்தினத்தையும் தந்துள்ளார். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாக அரிய பல தத்துவங்கள் இதில் அடங்கியிருக்கிறது.

உப வேதங்கள்:
நான்கு வேதங்களுக்கும் நான்கு உபவேதங்கள் உண்டு. அவை முறையே, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த(சாஸ்திரம்) வேதம் ஆகியவை.

ஆயுர்வேதம்:
மனிதனது ஆயுள், உடல், இந்திரியம் முதலியவற்றைப் பற்றிச் சொல்வது ஆயுர்வேதம். இது பிரம்மா, தன்வந்திரி முதலிய பலரால் வெளியிடப்பட்டது. அவற்றைத் தொகுத்து சரக ஸம்ஹிதை என்ற புத்தகமாக சரகர் வெளியிட்டார். வாக்படர் முதலிய பலரும் பல வைத்திய கிரந்தங்களை இயற்றியிருக்கிறார்கள். சுச்ருதர், வாத்ஸ்யாயனர் முதலியோர் வெளியிட்ட ரதி சாஸ்திரமும் இதில் அடங்கும். ஆயுர்வேதம் கிட்டத்தட்ட தர்ம சாஸ்திரத்தை ஒட்டி இருப்பதால், ஆயுர்வேதப்படி உணவுக் கட்டுப்பாட்டு முறைகள், உடலைப் பேணும் முறைகள் போன்றவற்றை கடைப்பிடிப்பவனுக்கு வியாதிகள் கிட்டே வராது. அப்படி கடைப்பிடிக்காததால் வரும் வியாதிகளுக்கும் இதில் பல வித சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

தனுர்வேதம்:
வில், அஸ்திர சஸ்திரங்களைப் பற்றிக் கூறும் இந்த வேதம் நான்கு அத்தியாயங்களாக விஸ்வாமித்திரரால் வெளியிடப்பட்டது. அதில் யந்த்ர விதி, மந்த்ர விதி என இரு வகையான பிரிவுகள் உண்டு. பாணம், சூலம், கத்தி, சக்கரம் முதலியன எறியப்படுதல் முதல் வகையைச் சார்ந்தது. இவை அந்தந்த தேவதா மந்திர உச்சாடம் செய்து பிரயோகம் செய்யப்படும்போது இரண்டாவது வகையில் சேரும். தர்ம யுத்தம் நடக்கும்போது அம்புகளுக்கு பதில் அம்பினை செலுத்தும் நேர்மையைப் பார்க்க பல தேவரிஷிகள் கூடுவது வழக்கமாம். நாகாஸ்திரத்துக்கு கருடாஸ்திரமும் ஆக்னேயாஸ்திரமும் பதில் அஸ்திரங்களாகும். அஸ்திர சஸ்திரங்களுக்கு யார் அதிகாரி, யாரிடத்தில் எப்படிப் பிரயோகம் செய்வது போன்றவை இவ்வேதத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது.

காந்தர்வ வேதம்:
இது பரதரால் இயற்றப்பட்டது. கீதம், வாத்யம், நர்த்தனம் முதலியவை இதில் கூறப்பட்டுள்ளன. ஸ்ருதி லயப்பட்டு தாளம் தவறாமல் பக்தியுடன் இறைவனைப் பாடித் துதிப்பவர்களுக்கு, ஈசன் அருள் எளிதாகக் கிட்டும். கைலாய மலையைத் தூக்கித் தூரத்தில் எறிய எண்ணிய ராவணனின் கைகள், மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டன. நாரதர் கட்டளைப்படி சாம கானம் செய்து, இறைவனைத் துதித்து ராவணன் விடுபட்டான். மனத்திலுள்ள எண்ணத்தை சொற்களால் வெளிப்படுத்தாமல் கை, முகம், கண் முதலியவற்றால் வெளிப்படுத்துவதே நர்த்தனம். இறை வழிபாட்டில் இதுவும் ஒரு அங்கம். இவற்றைப் பற்றி மேலும் பலரால் பல கிரந்தங்கள் எழுதப்பட்டன. அவற்றில் சங்கீத ரத்னாகரம் என்பது முக்கியமானது. இதில் ஸ்வர பேதம், தாள பேதம், ராகங்களின் லட்சணம், பெயர், அதற்குண்டான காரணம், அந்தந்த ராகத்துக்கு ஏற்ற காலம், அதன் அதிகாரி முதலிய பல அரிய விஷயங்கள் அடங்கியுள்ளன.

அர்த்த (சாஸ்திரம்) வேதம்:
அரசாங்க விஷயமாக சுக்ர நீதி, கௌடில்ய நீதி என பல கிரந்தங்கள் உண்டு. குதிரை, யானை, பசு முதலிய மிருகங்களை எப்படி அடக்கி வசியப் படுத்துவது, பலன் அளிக்காதவற்றை எப்படி பலன் அளிக்கும்படி செய்வது போன்ற பலவற்றை உள்ளடக்கி சில சாஸ்திரங்கள் வெளியாயின. செடி, கொடி, மரங்களைப் பற்றியும், ஒவ்வொரு பொருளின் இயற்கை குணம், சேர்க்கை குணம், இவற்றைப் பற்றியும், அவற்றின் உடலமைப்பைப் பற்றியும், பட்சிகள் மற்றும் அவற்றின் சகுனத்தைப் பற்றியும், சித்திரம், அலங்காரம், பாகம் முதலியவை குறித்தும் பல கிரந்தங்கள் முனிவர்கள் பலரால் வெளியிடப்பட்டன. இவற்றில் பலவும் தற்போது கிடைக்கவில்லை. இவற்றைச் சேர்த்து அறுபத்துநான்கு கலைகள் என்பர்.

தத்துவங்கள்:
சாங்க்யம் - கபில மகரிஷியால் ஆறு அத்தியாயங்களாக எழுதப்பட்டது இந்தத் தத்துவம். பிரகிருதி, புருஷன் என்ற இரண்டில் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கூட்டான பிரகிருதியிடமிருந்தே உலகம் தோன்றியது. புருஷன், தான் ஒன்றும் செய்யாதவன் என்று அறிந்து வைராக்ய சம்பந்தனாக இருத்தலே சுகம் பெற வழி என்பது இந்தத் தத்துவம்.

யோகம்:
பதஞ்சலி முனிவரால் நான்கு பாகங்களாகச் செய்யப்பட்டது யோக சாஸ்திரம். இதில் யமம், நியமம் முதலிய எட்டு அங்கங்களால் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துவது, யோக சித்தியினால் தொலைவிலுள்ள விஷயத்தை இங்கே இருந்தபடியே உணர்தல், ஆகாய வழியிலும், நீரிலும், நெருப்பிலும் சஞ்சரித்தல், விரும்பியதைப் பெறல் போன்ற அணிமாதி, அஷ்ட ஐச்வர்ய ப்ராப்தி, முடிவில் மோட்சம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பாசுபதம்:
பசுபதியால் ஐந்து அத்தியாயங்களாகச் செய்யப்பட்டது. இதில் பதி, பசு, பாசம் என மூன்று உண்டு. பசுவாகிய ஜீவன், பாசமாகிய பந்தத்தை (விபூதி ருத்ராட்சம் அணிதல், பஸ்ம ஸ்நாநம் முதலியவற்றால்) நீக்கி, பதி என்ற பரமசிவனை அர்ச்சித்தல் மோட்சம் என்பது தத்துவம்.

வைஷ்ணவம்:
எல்லாவற்றுக்கும் காரணமான பகவான் வாசுதேவரிடமிருந்து, ஸங்கர்ஷணன் என்ற ஜீவனும் அவனிடமிருந்து ப்ரத்யும்னன் என்ற மனதும், அதிலிருந்து அநிருத்தன் என்ற அகங்காரமும் உண்டாயின. மனம், மொழி, உடலால் எக்காலத்தும் பகவானை அர்ச்சித்துக் கொண்டிருப்பதே மோட்சம் அடைய வழி என்பது தத்துவச் சுருக்கம்.

சூரியனை முதன்மையானவனாகக் கொண்ட சௌரம், சக்தி என்ற அம்பாளை பிரதானமாகக் கொண்ட சாக்தம், கணபதியை மூல காரணமாகக் கொண்ட காணாபத்யம், கபாலியைத் தொழும் காபாலம், பாசுபதம் முதலிய ஆறு வகைக்கு ஷண் மதம் என்று பெயர்.

இப்படி, பல பெயர்கள் கொண்ட மதங்களும் ஒரே கடவுளைப் பற்றியனவே! எவர் எந்த வழியாகச் சென்றாலும், அவர்கள் இறைவனையே அடைகிறார்கள். இதுவே பரந்த எண்ணமுள்ள இந்து மதத்தின் தத்துவம்.

முக்கியமான சொற்களின் விரிவாக்கங்கள்:

மும்மூர்த்திகள்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைக் கொண்டு உலகுக்கு நன்மை செய்கின்றனர்.

முக்குணங்கள்: ஸத்வம், ரஜஸ், தமஸ் இம்மூன்றும் ஒவ்வொரு பொருளிடமும் காணப்படும்.

முக்கரணம்: மனம், மொழி, உடல் ஆகியன.

மூன்று உலகங்கள்: சுவர்க்க லோகம், பூவுலகம், பாதாள உலகம்.

நான்கு வேதம்: ரிக், யஜூர், ஸாம, அதர்வண வேதங்கள்.

நான்கு வித புருஷார்த்தம்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம். (அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியன)

நான்கு யுகங்கள்: க்ருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் ஆகியன.

ஆச்ரமம்: பிரம்மசர்ய, கிருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாஸ ஆச்ரமம் ஆகியன.

அந்தகர்ணம்: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியன.

ஐம்பூதங்கள்: பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேஜஸ்(தீ), வாயு, ஆகாசம்.

ஞானேந்திரியங்கள்: கண், காது, நாக்கு, மூக்கு, த்வக்.

கர்மேந்திரியங்கள்: வாக், பணி, பாத, பாஸு, உபஸ்தம்.

பிராணம்: பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகியன.

கோசம்: அன்னமய, ப்ராணமய, மநோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள்.

பஞ்சாங்கம்: திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

தர்சநம்: ந்யாய, வைசேஷிக, ஸாங்க்ய, யோக, மீமாம்ஸா, வேதாந்தம் ஆகியன.

அரிவர்க்கம்: காம, க்ரோத, லோப, மத, மோஹ, மாத்ஸர்யங்கள்.

கர்ம: யஜந, யாஜந, அத்யயந, தாந, ப்ரதிக்ரஹங்கள்.

சப்த தீவு (ஏழு தீவுகள்): ஜம்பு, சாக, பக்ஷ, குச, கிரௌஞ்ச, சான்மலி, புஷ்கர தீவுகள்.

சங்கல்ப வாரம்: பானு, இந்து, பௌம, ஸௌம்ய, பிருஹஸ்பதி, சுக்ர, சனி வாஸரங்கள்.

அஷ்ட திக்பாலர்: இந்திரன், அக்னி, யமன், நைருரிதன், வருணன், வாயு, குபேரன், ஈசன்.

அஷ்டாங்க யோகம்: யம, நியம, ஆஸந, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தியான, தாரண, சமாதி, அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்ய, ஈசத்வம், வசித்வம் ஆகியன.

நவக்ரஹங்கள்: ஆதித்யன், சோமன், அங்காரகன், புதன், பிருஹஸ்பதி, சுக்கிரன், சனைச்சரன், ராகு, கேது.

தசாவதாரங்கள்: மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.

SRI YANTRAM & LALITHA SAHASRA NAMAM

குண்டலினி




குண்டலினி சக்தி என்றால் என்ன?
நமது உடலின் கீழ்முதுகுப்பகுதியில் மலத்துவாரத்துக்கு சற்றுமேலே அதன் அழுத்தத்தோடு கிடப்பதுதான் உருண்ட குண்டலினி.மனிதனாகப் பிறந்த அத்தனைபேருக்கும் இந்த குண்டலினிசக்திஇருக்கிறது.இங்குதான் ஞானத்தின் தலைவனாகிய விநாயகக் கடவுள் இருக்கிறார்.நமது உயிரின் மையப்புள்ளியும் இதேதான்.ஒருவரின் உயரம் எவ்வளவோ,அதில் எட்டுச்சாண் உயரத்துக்கு இந்த குண்டலினியின் உயரம் இருக்கும்.
இதனை குறிப்பிட்ட தியானம் மூலமாக எழுப்பி,நமது முதுகுத் தண்டுவடம் வழியாக உருட்டிச்சென்று,பின் கழுத்து வழியாக அப்படியே மேலேற்றிச் சென்று அதை நமது உச்சந்தலையில் நிறுத்தினால்,கிடைக்கும் உணர்வு என்ன தெரியுமா?
ஒரு பெண்ணை உடலுறவுகொண்டு,அவளை உச்சகட்ட இன்பத்துக்குக் கொண்டு சென்று,அப்போது நாமும் உச்சகட்ட இன்பத்துக்கு வந்து நமது விந்து வெளியேறும்போது என்ன பரவசம் ஏற்படுமோ,அதை விட பல மடங்கு பரவசம் நமது உடல் மற்றும் மனதில் ஏற்படும்.ஒரு முறை அந்தசுகத்தைஅனுபவித்தவர்கள்,திரும்பத்திரும்பஅனுபவிக்கத்துடிப்பார்கள்.அப்படி குண்டலினி சுகத்தை அனுபவித்தவர்களுக்கு இந்த உலகத்து இன்பங்கள் அனைத்தும் தூசியாகத் தெரியும்.
இந்த குண்டலினி சக்தியை எழுப்ப பல ஆண்டுகள் ஆகும்.பலருக்கு பல பிறவிகள் நமது தலைக்கு மேலே ஒரு முழம் உயரத்தில் நமது குண்டலினி சக்தி நிற்கும்.இந்த நிலையை அடைய சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம். நமது உச்சந்தலையிலிருந்து ஒரு முழம் உயரத்தில் நமது குண்டலினி சக்தி நின்ற உடனே நமது பிறந்த ஜாதகப்படி,நாம் இந்தப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள்,விபத்துக்கள்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,போராட்டங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு.....பிட்யூட்டரி....


பெரிய அறிவாளிகளை மண்டைச்சுரப்பு அதிகம் உள்ளவர்கள் என்று அடிக்கடி கூறக்கேட்டு இருப்போம. அது என்ன மண்டைச் சுரப்பு என்று சிந்தித்துப்பார்த்தால் நம் முன்னோர்கள் எந்தச் சொல்லையும் பொருளற்று பயன்படுத்தவில்லை என்பது புலனாகும். பொதுவாக மனித உடலில் எண்ண்ற்ற சுரப்பிகள் (Glands) காணலாகின்றன. இவற்றில் சுரக்கும் நீர் ஒரு குழாய வழி எடுத்துச்செல்லப்பட்டு இரத்ததில் கலக்கப் படுகிறது.. இதே போல மனித உடலில் வேறு பல சுரப்பிகளும் உள்ளன. இவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள் சாதாரண சுரப்பிகள் போலன்றி நேரடியாக இரத்தத்தில் கலக்கும் தன்மையை உடையன. இதனை நாளமில்ல சுரப்பிகள் (Endocrine Gland) என்பர். இந்த நாளமில்லா சுரப்பிகளில் சில சுரப்பிகள் ஒரு ஹார்மோனையும் சில சுரப்பிகள் இரு ஹார்மோன்களையும் இன்னும் சில மூன்று நான்கு ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இந்த சுரப்பிகளுக்கெல்லாம் தலைமை சுரப்பியாகத் திகழ்வது பிட்யூட்டரி சுரப்பி. (Pituitary Gland). இது இளஞ்சிவப்பும் சாமபல் நிறமும் கலந்த ஒரு நீல நிறத்தில் காணப்படும். மற்ற நாளமில்ல சுரப்பிகளையெல்லாம் இது ஆள்கிறது. அவைகளை இயக்குகிறது. மற்ற சுரப்பிகளின் குறைகளை நிவர்த்தி செய்கிறது. இதுவே தசைகள் எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. இது கரியமில வாயு, புரதச்சத்து, கொழுப்புச்சத்துக் குறைபாட்டினைக் கட்டுப்படுத்துகிறது. இது இடம்பெற்றுள்ள இடம் எண்சான் உடலுக்குப் பிரதானமாகத் திகழும் தலையில். இதனை,

”உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலையடி அவி

யாமலெரியுது வாலைப் பெண்ணே”

என்று கொங்கணசித்தர் எத்துனை அழகாகப் பாடுகிறார். தலை உச்சிக்கு நேராக உள் நாக்கிற்கு மேலாக ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. அச்சு என்றால் பீடம் என்று பொருள். இச்சொல் தலைமை பீடத்தை வகிக்கும் சுரப்பி பிட்யூட்டரி என்பதை விளக்கும். அது அவியாமல் எரியும் விளக்கு என்றும் கூறுவார்.

இந்த பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாட்டினால் வருவது டிராஃபிஸம் (Dwarfism) என்றழைக்கப்படும் மிகக் குள்ளமான உருவம். இது குறைவாகச் சுரக்கும் போது இக்குள்ள நோய் ஏற்படுகிறது.

இதன் மிகுதிப்பாட்டில் வருவதே ஜெய்ஜாண்டிஸம் (Gigantism) எனறழைக்கப்படும் அதிக வளர்ச்சி.. இது அதிகமாகச் சுரக்கும் போது அளவுக்கு அதிகமான உடல் உயரம், வளர்ச்சி ஏற்படுகிறது.

குமரப்பருவத்தில் இளைஞர்கள் கிடு கிடுவென அகோரமாக வளர்ச்சி அடைந்து காணாப்படுவர். இதன் குறைபாட்டாலோ மிகுதிப்பாட்டாலோ வரும் மிக முக்கியமான ஒரு விளைவே இந்த அகோர வளர்ச்சியான அக்ரோமகலி (Acromegaly) எனப்படும் குமரப்பருவ குறைபாடு..

அதுமட்டுமல்ல பார்க்கும் சக்தி, கேட்கும் திறன், நினைவாற்றல், தன்னம்பிக்கை இவற்றையும் இச்சுரப்பியே காக்கிறது. இச்சுரப்பி நன்கு வேலை செய்வதால் மூளையின் திறனும் அதிகரிக்கிறது.

இந்த சுரப்பியின் சிறப்பான வேலைத்திறத்தினால் உருவாவவர்களே அறிவிற்சிறந்த மேதைகளும், அறிவியல் அறிஞர்களும், ஞானிகாளும், கவிஞர்களும் என்போர்.

இது எப்போது பாதிக்கப்படுகிறது? மற்ற உறுப்புகளைப் போன்றே அதிர்ச்சி, விபத்து, பிரசவம் ஆகியவற்றினால் பாதிக்கப் படுகிறது. இவ்வாறு இந்த பிட்யூட்டர் பாதிக்கப் படும்போது இதன் அருகில் மூளையில் அமைந்துள்ள மற்றொரு சுரப்பியான பினியல் சுரப்பியும் பாதிக்கப்படுகின்றன. எவ்வாறு பிட்யூட்டரியின் சிறப்பான் வேலையின் போது அறிஞர்களும் சான்றோர்களும் அவதரிக்கின்றார்களோ அதே போல இச்சுரப்பிகளின் குறைபாட்டின் காரணமாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்து விடுகிறது..

இந்த பிட்யூட்டரியைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது சற்றேறக்குறைய அதன் அருகில் உள்ள பினியல் சுரப்பியையும் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இச்சுரப்பியின் செயல்பாடுகள் பல இன்னும் மருத்துவ ஆய்வுக்கே புலனாகாதப் புதிர்களாக உள்ளன. இதுவும் மற்ற சுரப்பிகளை கட்டுப் படுத்துகிறது.

இந்தச் சுரப்பியால் விளையும் நன்மை. யாதெனில், இச்சுரப்பி சோடியம், பொட்டாசியம், ஆகிய உப்புகளின் அளவைச் சீராக வைக்கிறது. இச்சுரப்பியும் நன்கு வேலை செய்யும் போது அறிவு, நற்குணம், தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் அதிகரிக்குமாம். மனம் எதற்கும் கலங்காது இருக்குமாம். இதன் காரணமாகவே நாடு யோகிகளையும் ஞானிகளையும் பெற்றுள்ளது.இது சரிவர இயங்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இச்சுரப்பி இயக்கக் குறைவால் சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாகி கை, கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. உள்ளங்கால் உள்ளங்கை பகுதிகளில் அதிக வியர்வை உண்டாகிறது.இதைத்தவிர தைராய்டு சுரப்பி, பாரா தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கனையம், சினைப்பைகள், விதைப்பைக்ள் என்று முக்கியமான எட்டு சுரப்பிகள் உள்ளன. இவற்றுள் சினைப்பையும் விதைப்பையும் சுரப்பிக்ள் என்று அழைக்கப்படாவிட்டாலும் இவை பிட்யூட்டரியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இச்சுரப்பிகளைப் போன்றவையே.

மூச்சுக்குழாயின் இரு பக்கங்களில் இருக்கும் தைராய்டு சுரப்பு தைராக்சின் என்ற திரவத்தைச் (ஹார்மோன்)சுரக்கிறது. இது அதிகமாகச் சுரக்கும் போது எண்ணம், சொல், செயல் எல்லாம் மந்தமாக இருக்கும். அதிகமாக சுரக்கும் போது (ஹைபர் தைராய்டு) எல்லாமே முந்தைய செயல்களுக்கு எதிர் மாறாக இருக்கும். இது அதிகமாக வேலை செய்யாத போது இதில் உள்ள அயோடின் குறைபாட்டால் காய்டர் (Goitre) எனப்படும் முன் கழுத்துக் கழலை தோன்றுகிறது.

பாரா தைராக்சின் எனப்படுவது, தைராய்டு சுரப்பிகளின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டாக மொத்தம் நான்கு சுரப்பிகள் உள்ளன. இது கால்சியம், இரத்தம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றது.

மார்புப் பகுதியில் மூச்சுக்குழாய இரண்டாகப் பிரியும் இடத்தில் உள்ளது தைமஸ் சுரப்பி. இது குழ்ந்தைகளின் நோய் தடுப்புச் சக்திக்கு பெரிதும் உதவுகிறது.

சிறு நீரகங்களின் தலைப் ப்குதியில் பக்கத்திற்கு ஒன்றாக உள்ள இரு சுரப்பிகள் அட்ரினல் சுரப்பி எனப்படும். கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் இதன் சுரப்பு விகிதம் கூட கூறைய நிகழ்கிறது. இது கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு உதவுகிறது.

இன்சுலின் என்னும் திரவததைச் சுரக்கும் கணையம் குறைந்தால் ஹைபர்க்ளைசீமியா (Hyper glycamia) என்ற நீரிழிவு நோயும், இதன் சுரப்பு அதிகரித்தால் இரத்த அழுத்தமும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலியும் ஏற்படுகிறது.

பெண்களின் கருப்பையின் இருபுறமும் இரண்டு சினைப்பைகள் உள்ளன. இது முக்கியமாக தலைமை சுரப்பியான பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

விந்துககளை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் மகப்பேற்றுக்குக் காரணமாவதுடன் செல்கள், எழும்பு மஜ்ஜை., நரம்புகள், விந்தணுக்கள் ஆகியவற்றை சீர் செய்கின்றன. இவை இரண்டும் சுரப்பிகளுடன் சேக்கப்படாவிட்டாலும் இவையும் பிட்யூட்டரியின் ஆளுமையில் உள்ளன.

”நெற்றியிலே தயங்குகின்ற நீலமாம் விளக்கினை

உற்றுணர்ந்து பாராடா உன்னுள் இருந்த சோதியைப்

பத்தியிலே தொடர்ந்தவர் பரமயம் அதானவர்

அத்தலத்து இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே”

என்று சிவ வாக்கியார் உரைப்பது எதனை என்று நினைக்கின்றீர்கள்? நெற்றியிலே இருக்கின்ற நீல விளக்கு இந்த பிட்யூட்டரி என்னும் சுரப்பிதான். ஒளிர்விடுகின்ற (தயங்குகின்ற) அதனை உற்று பார்த்து நினைவுகளை ஒரு தலையாக அடக்கி உணர்ந்து பார்த்து, உள்ளே நிறைந்து இருக்கின்ற சோதிமயமான இறைவனைத் தியானம் செய்பவர் எங்கும் பரவி இருக்கின்ற தேவ நிலையை அடையலாம். தியானம் என்கிற மூச்சுப் பயிற்சியின் மூலம் இந்த பிட்யூட்டரி சுரப்பியை நன்கு செயலாற்ற வைக்கலாம். இதன் செயல்பாடு உடலுக்கு மட்டுமன்றி அறிவு வளம் பெற்ற சான்றோராக ஞானியாக ஆக்கும் என்று மேலே கண்டோம்

மாறல்: இத்துனை செயல்பாடுகளை நிகழ்த்தும் சுரப்பிகளின் தலைமை தலையில் தான் உள்ளது. அந்த நீலமாம் விளக்குதான் பிட்யூட்டரி என்பது நாம் அறிந்தது. இந்த தலைமையைச் சீராகச் சுரக்கச் செய்ய தியானத்தால் முடியும். அதாவது குண்டலினி யோகம் அல்லது சரப்பயிற்சி என்பர் அக்காலத்தில். இரு புருவ மத்தியில் பார்வையையும் மனதையும் ஒருநிலையில் வைப்பதால் இம்முறையைச் செய்யலாம். முறையான தியானம் நாளமில்லா சுரப்பிகளின் தலைமைச் சுரப்பியான பிட்யூட்டரியை சரிவர வேலை செய்ய வைக்கும் என்பதே. தலைமை சரிவர இயங்கினால் மற்றவையும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்து நம்மை உடல் அளவிலும் உள்ளத்து அளவிலும் செம்மையாக வைக்கும்.